புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குடிபோதையில் வகுப்பிற்கு வந்துள்ளார். இதை பார்த்த ஆசிரியை அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த மாணவியின் புத்தக பையை சோதனையிட்டபோது, பையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானத்தில் மதுபானம் கலந்திருந் வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த பாட்டிலை பரிமுதல் செய்த ஆசிரியை இது குறித்து அந்த பள்ளியின் முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி முதல்வர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி, பின்னர் அந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்ததுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு வந்த பெற்றோரிடம் மாணவியின் நிலைமையை எடுத்து கூறி, பின்னர் அந்த மாணவியை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும், கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று, வேறு மாணவிகள் யாராவது மது அருந்தி வந்துள்ளனரா என்று விசாரணை நடத்தியுள்ளனர்.
பள்ளி மாணவி மது அறிந்திவிட்டு பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.