Home விளையாட்டு தொடக்க வீரராக டிவில்லியர்ஸ்: டி20 உலகக்கிண்ணம் வெல்ல தென்ஆப்பிரிக்கா புதிய திட்டம்

தொடக்க வீரராக டிவில்லியர்ஸ்: டி20 உலகக்கிண்ணம் வெல்ல தென்ஆப்பிரிக்கா புதிய திட்டம்

du_plessis_001டி20 உலகக்கிண்ணத் தொடரில் டிவில்லியர்சை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் 29 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது.

இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி, “உலகக்கிண்ணத் தொடரிலும் டிவில்லியர்ஸ் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

இந்திய மைதானங்களில் நல்ல அனுபவம் கொண்டுள்ள டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பொருத்தமானவர்.

ஐபிஎல் போட்டிகளில் நடுக்கள ஆட்டக்காரராக களமிறங்கி அவர் அசத்தியுள்ளார். இதனால் பெரிய அளவிலான ஓட்டங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

டி20 உலகக்கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவது, டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் இருக்கும் எங்களுக்கு சாதகமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.