கவலை வெளியிட்டுள்ள யாழ் வியாபாரிகள்

  யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையிலும் பழங்கள், இளநீர் போன்றவற்றின் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக குடா நாட்டில் வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பழம், இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் .

பொருளாதார நெருக்கடி நிலை

எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க வருவார்கள் தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்தாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Previous articleயாழில் சப்ரைஸ் கிப்ரால் நின்ற வெளிநாட்டு திருமணம்
Next articleநாளைய நாள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!