ரசிகர்களை என்றும் ஏமாற்றாத தரமான நடிகரின் அடுத்த படைப்பு

aarathu_sinam002தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்களுக்கு மட்டும் எந்த விமர்சனமும் கேட்காமல் நம்பி போகலாம். அப்படிப்பட்ட ஒரு நடிகர்களில் ஒருவர் அருள்நிதி தான்.தொடர்ந்து மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் என தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பவர் அருள்நிதி.இவர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஆறாது சினம். இதுவரை பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ளார்.ஏறகனவே இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர, கண்டிப்பாக படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Previous articleதலையில் நீர்கோர்த்துவிட்டதா? இதோ வழிகள்!
Next articleதீ விபத்திலிருந்து குடும்பத்தை காப்பாற்றி ஹீரோவான நாய்: கனடாவில் ஒரு உருக்கமான சம்பவம்