சரத்வீரசேகரவிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே இன்றைய தினம்(25.08.2023)  இந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிதுறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்ட ஏனையவர்களையும் கைது செய், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரையும் உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து, உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி மு.தம்பிராசா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Previous articleஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleபெருந்தொகை பணத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பணிப்பெண்