மகிந்த ரகசியமாக அனுப்பிய தூது: கசியும் தகவல்- கசிய விட்டது மைத்திரி தரப்பு தான் !

27dae49fcc56dfbc72980f50c2e47e80அடிமேல் அடி விழுந்து , அம்மியே உடைந்த கதை கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள். அது இதுவாக தான் இருக்க முடியும். தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இல்லாமல் ஒழித்தால் தான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று மகிந்த ராஜபக்ஷ முன் நாள் அமைச்சர் ஒருவர் ஊடாக மைத்திரிக்கு தூது அனுப்பியுள்ளார். அதுபோக தான் எவ்வித இடைஞ்சலும் தராமல் அப்படியே ஒதுங்கிச் செல்வதாகவும். வேண்டும் என்றால் பிறிதொரு நாட்டில் சென்று குடியேறவும் தயார் என்று வேறு , தூது அனுப்பியுள்ளார் மகிந்தர்.

ஏற்கனவே டுபாய் அரசு மற்றும் சீ- ஷெல் நாட்டு அரசுடனும் மகிந்த தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனூடாக இந்த இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு தனது குடும்ப அங்கத்தவர்கள் பலரை அனுப்பிவைக்க தற்போது மகிந்த நாட்டம் காட்டி வருகிறாராம். பாரியார் , யோசித ராஜபக்ஷ , பசில் மற்றும் கோட்டபாய அவர்களது பட்டாளத்தில் உள்ள பலரை இவ்வாறு வேறு நாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கவே மகிந்த நாட்டம் காட்டி வருகிறார், ஆனால் மகிந்த அனுப்பிய தூதை முற்றாக நிராகரித்துவிட்டார் மைத்திரி.

மிகவும் சூட்சுமமான முறையில் , திட்டமிட்ட வகையில் நாட்டை விட்டு வெளியேற மைத்திரியின் உதவி நாடப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் மேலும் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு கடும் உடல் நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறியே , சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.

Previous articleதீ விபத்திலிருந்து குடும்பத்தை காப்பாற்றி ஹீரோவான நாய்: கனடாவில் ஒரு உருக்கமான சம்பவம்
Next articleசமஷ்டி என்றால் உடனே பிரிந்து செல்வது என்ற அர்த்தம் இல்லை- விளக்கம் கொடுத்த விக்கி !