தொடரும் முட்டை இறக்குமதி

முட்டை இறக்குமதி தொடரும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம்  அறிவித்துள்ளது.

 முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைக் கொள்கையின் அடிப்படையில்,  அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபன் ஊடாக, நாளாந்தத் தேவையான ஒரு மில்லியன் முட்டைகளுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Previous articleவங்கிகளுக்கு மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!
Next articleகுழந்தைகளுக்கு தொலைபேசி கொடுக்காதீர்கள்