பசில் ராஜபக்ச தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு

basi.jpg3_கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதவான் நீதிமன்றமொன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்த விசாரணைகளை மேற்கொள்ள உள்ளது.

நீதியசரர்களான நிஹால் குணரட்ன மற்றும் கே.ரீ. சந்திரசிறி ஆகியோர் இந்தக் குழாமின் ஏனைய இரண்டு நீதியரசர்களாவர்.

நிதி மோசடி தொடர்பில் நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து மனுக்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பசில் ராஜபக்ச மனுவொன்றின் மூலம் கோரியிருந்தார்.

பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்ட பத்து பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Previous article7 மாத குழந்தையின் தாயை 10 பேர் பாலியல் துஷ்பிரயோகம்
Next articleமாணவியின் கொலைக்கு நீதிகோரி கிளிநொச்சியிலும் ,வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்