நடித்துக்கொண்டிருந்த போது மருத்துவமனையில் ரஜினி அனுமதி

rajiniஉடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றார். கடந்த 2011ம் ஆண்டு “ராணா’’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் சிகிச்சைப்பெற்ற அவர், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்று திரும்பினார்.

சில மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். “லிங்கா’’ படத்துக்குப் பிறகு இப்போது ரஞ்சித் இயக்கும் “கபாலி’’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கடைசி ஷெட்யூலுக்காக மலேசியா சென்ற ரஜினி, நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. சென்னை வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ரஜினிகாந்த் தரப்பில் விசாரித்தபோது, “சாதாரண செக்கப்புக்காக மட்டுமே ரஜினி மருத்துவமனை சென்றார். வேறு ஒன்றுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ என்று கூறப்பட்டது.

Previous articleபலாலி விமானத்தளத்தின் விஸ்தரிப்பு நடந்தே தீரும்! தொடரும் பிடிவாதம்…
Next articleமெகசீன் சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்