மெகசீன் சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்

masinprissinகொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 15 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போரட்டத்தில் தமக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்தும் நிறைவேற்றப்படாத காரணத்தாலேயே அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலையில் விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

Previous articleநடித்துக்கொண்டிருந்த போது மருத்துவமனையில் ரஜினி அனுமதி
Next articleகையடக்கத் தொலைபேசி மோகம், 14 வயது சிறுமி பரிதாப பலி