கையடக்கத் தொலைபேசி மோகம், 14 வயது சிறுமி பரிதாப பலி

cild_clகைப்பேசி மோகம் சிலரது உயிரையும் குடிக்கிறது என்பது உண்மை.

ரஸ்யாவின், மொஸ்கோ நகரில் தனது தாயார் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்துள்ளார் 14 வயதான பெயர் வெளியிடப்படாத சிறுமி.

கைப்பேசி அதிகம் பயன்படுத்தி வந்துள்ள இந்த சிறுமி, சம்பவத்தன்று குளிக்கும்போதும் கைப்பேசியை பயன்படுத்த விரும்பியுள்ளார்.

இதற்கென ‘extension cord’ ஒன்றை பயன்படுத்திய அவர், அதன்வழியாக கைப்பேசியை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைடையே அவரது கைகளில் இருந்து தவறிய கைப்பேசி தண்ணீரில் விழுந்து அதன் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மிக கடுமையாக மின்சாரம் தாக்கிய அந்த சிறுமி உதவிக்கு கூட எவரையும் அழைக்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குளிப்பதற்காக சென்ற தமது மகள் இதுவரை குளியல் அறையில் இருந்து வெளியே வராதது கண்டு கலக்கமுற்ற தாயார்,சிறுமியின் பெயர் சொல்லி அழைத்துள்ளார், ஆனால் எந்த வித பதிலும் இல்லாதது கண்டு,

குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் உயிரற்ற தமது மகளின் உடல் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

Previous articleமெகசீன் சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்
Next articleஎன்னுடன் இருக்கும் அனைவரும் இவ்வாறு தாக்கப்படுவர்! மஹிந்த