தனக்கு எதிரான வழக்கை எதிர்கொள்வதற்காக அவர் இந்த விளம்பரத்தை பிரசுரித்திருப்பதோடு மனமுகந்த உதவியாளர்கள் நன்கொடையாக தனக்கு வழங்குமாறும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் சிங்களப் பத்திரிகையின் முழுப் பக்கத்திலும் அவர் தனது விளம்பரத்தை கறுப்பு,வெள்ளை நிறத்தில் பிரசுரித்திருக்கிறார்.
இவர் இந்த விளம்பரத்திற்காக 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைக்குட்டி தொடர்பான வழக்கை முகங்கொடுப்பதற்காக தன்னிடம் 10 ரூபாகூட இல்லை என்று உடுவே தம்மாலோக்க தேரர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.