வெளியில் வந்தார் ஞானசார

janasara01காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை தூற்றினார் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞாசார தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்க, சாட்சியாளர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும் கட்டளையிட்டார்.

Previous articleலசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை ஆவணங்கள் அழிப்பு
Next articleமாணவனின் பிளேட் வீச்சில் நால்வர் காயம்