மாணவனின் பிளேட் வீச்சில் நால்வர் காயம்

st4கம்பஹா, ஹேனேகம பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவனொருவன், சக மாணவர்கள் மீது பிளேட் ஒன்றினால் கீறியதில், நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களில் மூவர் கம்பஹா வைத்தியசாலையிலும் மற்றையவர் ரதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினையொன்று காரணமாகவே, மேற்படி மாணவன் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவெளியில் வந்தார் ஞானசார
Next articleநாளை ஹர்த்தால்! யாழ். பல்கலை பூரண ஆதரவு!