தங்கத்தின் இன்றைய நிலவரம்

செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,520 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,160 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,522 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.36,176 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேவேளை வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleவரணி மத்திய கல்லூரியின் முன்னணி பெறுபேறுகள்
Next articleவிபச்சார விடுதி ஒன்றில் நால்வர் கைது!