எக்னெலிகொட வழக்கு! அரச சட்டத்தரணியை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள்!

download-3-3ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட வழக்கின் அரச சட்டத்தரணியை அச்சுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள் அவரது வீட்டின் அருகில் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வழக்கின் அரச தரப்பு சட்டத்தரணியான திலீப பீரிஸ், சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட மற்றும் வழக்கை விசாரிக்கும் ஹோமாகம நீதிமன்றம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலுக்கு அனுப்பும் விடயத்திலும் திலீப பீரிஸ் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஹோகந்தரை பிரதேசத்தில் உள்ள திலீப பீரிஸின் இல்லத்தினருகிலும், அப்பிரதேசம் முழுமையாகவும் அவரை அச்சுறுத்தி, கேவலப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணையின் போது பொலிசார் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள சீசீடிவி கருவிகளை பரிசோதித்துப் பார்த்த போது சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் தொடர்பான எந்தவொரு காணொளிப் பதிவும் அவற்றில் பதிவாகி இருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் அவற்றை ஒட்டியிருப்பது பொலிசாரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous article15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்ற கனேடிய மேயர்: காரணம் என்ன தெரியுமா?
Next articleபூமிக்கு ஆபத்தா சுற்றித்திரியும் மர்ம விண்கலம்..!