பூமிக்கு ஆபத்தா சுற்றித்திரியும் மர்ம விண்கலம்..!

vinபூமி கிரகத்திற்கு அருகே சுழன்று கொண்டிருக்கும் சிறுகோள் ஒன்றை நோக்கி மிகவும் வெளிச்சமான மற்றும் நீளமான ஒரு அடையாளம் தெரியாத விண்கலம் ஒன்று பயணிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள இந்த வீடியோவில் காணப்படும் வெள்ளை பொருள் ஆனது யூஎப்ஒ எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் விண்கலமா என்ற கோணத்திலும் அந்த வீடியோ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது சார்ந்த தகவல்களையும் பதிவான வீடியோவையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

சில நொடிகள்
அந்த மர்ம விண்கலம் ஆனது சில நொடிகள் மட்டுமே பதிவான அந்த வீடியோ முடியும் வரையிலாக சுழன்று கொண்டிருக்கும் ஒரு குறுங்கோளை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிய நிலவு
இது குறித்து விளக்கமளித்த நாசாவோ இந்த பொருள் பற்றி தனைகளுக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அது ஒரு வகையான ஒரு சிறிய நிலவு போன்ற விண்வெளி பொருள் என்றும் கூறியுள்ளது.

மறுப்பு
ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் நாசாவின் விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு அந்த வீடியோவில் வருவது ஒரு யுஎஃப்ஒ என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முட்டை வடிவம்
கிடைக்கப்பெற்ற வீடியோவை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இருந்து அந்த மர்ம விண்கலம் ஆனது நீளமான மற்றும் அதே சமயம் சாத்தியமான முட்டை வடிவத்தில் (Oval shape) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Show Thumbnail

பிக்ஸ்லேட்
சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவிக் கொண்டிருக்கும் இந்த வீடியோவில் காணப்படும் மர்ம பொருள் ஆனது உலோக மேலோடு கொண்டிருப்பது போல் தெரிகிறது என்ற கருத்துகள் ஒருபக்க எழ மறுபக்கம், ‘ஸூம்’ (Zoom) செய்யும்போது வீடியோ ‘பிக்ஸ்லேட்’ (Pixelate) ஆவதால் தான் அப்படி தெரிகிறது என்ற மறுப்பும் எழுந்தவண்ணம் உள்ளது

மேலும் படிக்க
விண்ணில் தெரிந்த ‘கடவுளின் கை’, புகைப்படம் எடுத்த நாசா..! பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் ‘கிழிந்து அல்லது ‘எரிந்து’ சாகும்..!

Previous articleஎக்னெலிகொட வழக்கு! அரச சட்டத்தரணியை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள்!
Next articleகொடூரத்திலும் கொடூரம் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட சிறுமி சுட்டுக்கொலை