கொடூரத்திலும் கொடூரம் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட சிறுமி சுட்டுக்கொலை

in-girlஉத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் 15 வயது சிறுமி பிரிங்கி தனது சகோதரியுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த குல்தீப் மற்றும் அவரது நண்பர் பூஜாரி அந்த பெண்களை கேலி செய்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென அந்த வாலிபர்களில் ஒருவன் துப்பாக்கியால் அந்த பெண்களை நோக்கி சுட்டான். இதில் பிரிங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அவருடைய சகோதரி படுகாயம் அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து குல்தீபையும், பூஜாரியையும் கைது செய்தனர்.

இது குறித்து காயம் அடைந்த பெண் கூறுகையில், பல மாதங்களாக சில வாலிபர்கள் எங்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் காவற்துறையில் புகார் அளித்தும், காவற்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Previous articleபூமிக்கு ஆபத்தா சுற்றித்திரியும் மர்ம விண்கலம்..!
Next articleவேலூர் மத்திய ஜெயிலில் பேரறிவாளனுடன் சினிமா டைரக்டர்கள் சந்திப்பு