உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த கனடிய பிரதமர்!

gay_justin_002கனடாவில் நடைபெறவிருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அணிவகுப்பில் முதல் முறையாக கனடிய பிரதமர் கலந்துகெள்ளவிருப்பது உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது.
கனடாவின் ஒன்றாரியோவில் யூலை மாதம் 3 ஆம் திகதி Pride Tornato என்ற ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பு அணிவகுப்பினை நடத்தவிருக்கிறது.

இந்நிலையில், இந்த அணிவகுப்பில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொள்ளவிருக்கிறார், இதனை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்த அமைப்பு, பிரதமர் கலந்துகொள்ளவிருப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கனடிய நாட்டிற்கு வருகை தந்துள்ள சிரிய அகதி ஓரினச்சேர்க்கையாளர்களும் கலந்துகொள்ளலாம் எனக்கூறியுள்ளது.

இது கனடாவிற்கு மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய செய்தியாகும், ஏனெனில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரதமர் வெளிப்படையாக தனது ஒத்துழைப்பை வெளிக்காட்டியுள்ளார்.

Previous article25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! – சந்தித்தார் சீமான்!
Next articleவிடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த எட்டு பேர் விடுதலை