இலங்கைக்கு அமெரிக்கா உதவி தொடரும் ஜோன் கெரி உறுதி

john-kerryஸ்ரீலங்காவின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு தமது அரசாங்கம் எப்போதும் ஆதரவு வழங்குமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

செனட் வெளிவிவகார உறவுகள் குழு முன்னிலையில் அடுத்த நிதியாண்டிற்கான, வரவு செலவுத்திட்டம் தொடர்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா, நைஜீரியா, பர்மா போன்ற நாடுகளில் ஜனநாயகம் முன்னேற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மத்திய ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் தாம் விஜயம் மேற்கொண்டதாகவும், மனித உரிமை மேம்பாடு, ஜனநாயக விருத்தி, அபிவிருத்தி மற்றும் சக்திவலு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் முன்னேற்றமடைந்துள்ளதை அவதானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleபிரபல சிங்கள நடிகையின் சிக்கலான செல்பி, சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பு
Next articleயாழில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முப்படையினர்