பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாரிஸ் நகரில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமான லா செப்பலில் இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 17 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கையில் காயமடைந்த நிலையில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் உயிர் தப்பியிருந்தார்.
இதற்கு முன்னர் 1996 ஆம் ஊடகவியலாளர்களான கந்தையா கஜேந்திரன் மற்றும் கந்தையா பேரின்பநாதன், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பருதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் படுகொலைகளுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் அரசை வலியுறுத்தினர்.