கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை,  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.