முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.