பாலியல் விடுதிகள் தரைமட்டம்

sex_houseஇந்தோனேஷியாவின் பழைய ‘சிவப்பு-விளக்கு’ பகுதிகளில் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் முற்றாக ஒழிக்கும் அரசின் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள காலிஜோடோ மாவட்டத்தில் உள்ள பாலியல் விடுதிகளும் மதுபான விடுதிகளும் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன.
ஒருகாலத்தில் சுமார் மூவாயிரம் பேர் இந்தப் பிரதேசத்தில் வசித்தனர்.

உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனேஷியாவில் உள்ள எல்லா சிவப்பு விளக்கு மையங்களையும் மூடிவிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

நாடெங்கிலும் இப்படியான நூறு பாலியல் தொழில்- பகுதிகள் உள்ளன.

இந்தோனேஷியாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது.

ஆனால், பெரிய நகரங்களில் இந்தத் தொழில் நடக்கும் இடங்கள் இன்னும் உள்ளன.

Previous articleபாலியல் குற்றவாளிகளுக்கு புலிகள் காலத்தில் வழங்கிய தண்டனையே சிறந்தது!
Next articleநாம் தமிழர் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு