“ஹாட்ரிக்” வெற்றிக்கு தயாரான இந்தி்யா.. “உலக சாம்பியன்” இலங்கையுடன் இன்று மோதல்

dhoni_malinga_001ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது.

இதில் இதுவரை இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணி டாக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனது 3வது லீக் ஆட்டத்தில் நடப்பு டி20 உலக சாம்பியன் இலங்கையை சந்திக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளில் வலுவான நிலையில் இருக்கிறது. துடுப்பாட்ட வரிசையும், பந்துவீச்சும் சிறப்பாக இருப்பதால் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கை அணியில் சிறப்பான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தும் பெரிய ஓட்டங்களை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பந்துவீச்சில் இலங்கை நல்ல நிலையில் உள்ளது. அணித்தலைவர் மலிங்கா காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

கடைசிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்ற இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த ஆண்டில் இந்திய அணி தான் மோதிய 8 டி20 போட்டியில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

அதேபோல் இந்தியா- இலங்கை அணிகள் இதுவரை 9 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 5 தடவையும், இலங்கை அணி 4 முறையும் வென்றுள்ளன.

சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் ’ஹாட்ரிக்’ வெற்றியைப் பெற ஆவலாக உள்ளது.

Previous articleஅடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ள அதிரடி கைதுகள்! பரபரப்பாகும் கொழும்பு
Next articleமைத்திரி – மங்களவுக்கிடையில் முறுகல்! சர்வதேச ரீதியில் குழப்பம்