மைத்திரி – மங்களவுக்கிடையில் முறுகல்! சர்வதேச ரீதியில் குழப்பம்

mangala_7ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டினை கொண்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். இதனை திட்டவட்டமாகவும் அறிவித்திருந்தார்.

எனினும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தினை கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையை ஏற்புடுத்துவதற்கு, சர்வதேச பங்களிப்பை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி – வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் இந்த விடயத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் மங்கள சமரவீர புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பொறுப்பான அமைச்சு வழங்கப்பட்ட போதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மங்கள அடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Previous article“ஹாட்ரிக்” வெற்றிக்கு தயாரான இந்தி்யா.. “உலக சாம்பியன்” இலங்கையுடன் இன்று மோதல்
Next articleஇலங்கையை இறுக்கிப் பிடிக்கும் அமெரிக்கா