யாழில் காதலிப்பவர்களுக்கு இலவசத் திருமணம்!

jaffna-loveமாற்றுத்திறனாளிகளிற்கு இலவசமாக திருமணம் நடத்தி அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்டப நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகளிற்கு எதிர்வரும் 6ம் திகதி இந்த திருமணம் நடக்கவுள்ளது.

அன்றையதினம் திருமணம் செய்து கொள்பவர்களிற்கு இலவசமாக தாலி, கூறை, பட்டுப்புடவை, வேட்டிகள், வாழ்வாதார உதவிகள், வீட்டுத்தளபாடங்கள் என்பன வழங்கப்படவுள்ளன. இந்த செலவுகளை இராஜமாணிக்கம் திருமண மண்டபத்தினரே ஏற்கவுள்ளனர்.

காதலித்துள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏனையவர்களும் இலவசமாக நடத்தப்படும் இந்த திருமணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை எதிர்வரும் 6ம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் தலைவர், இராஜமாணிக்கம் கல்யாண மண்டபம், பிரதானவீதி, அச்சுவேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசூரியிடம் 5 கோடி கேட்கும் சிவகார்த்திகேயன் – கலாட்டா ஆரம்பம்
Next articleஇறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: சொல்கிறார் சோயிப் மாலிக்