இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: சொல்கிறார் சோயிப் மாலிக்

malik_003ஆசியக்கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று அந்த அணியின் வீரர் சோயிப் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசியக்கிண்ண டி20 தொடரில் 2வது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்தியா.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான சோயிப் மாலிக் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டது பெரும் ஏமாற்றம் அளித்தது.

நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் ஆடியதே தோல்விக்கு காரணமாகும்.

இருப்பினும் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் இந்தியாக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.

Previous articleயாழில் காதலிப்பவர்களுக்கு இலவசத் திருமணம்!
Next articleஅவசர எச்சரிக்கை பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் – நாசா தகவல்..!