விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய சிங்கம்: அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

lion_escape_001கனடா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவில் இருந்து வெளியேறி ஊருக்குள் சிங்கம் புகுந்ததை தொடர்ந்து பொதுமக்களை காப்பாற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒட்டாவா நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் Papanack Park என்ற விலங்குகள் பூங்கா அமைந்துள்ளது.

கொடூர மிருகங்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை சிங்கம் ஒன்று பூங்காவிலிருந்து தப்பி வெளியேறியுள்ளது. இதனை விலங்குகள் பூங்கா ஊழியர்கள் உடனடியாக கவனித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இந்த தகவலை கேட்டு அதிர்ந்துப்போன அதிகாரிகள், சிங்கத்தை கண்டுபிடித்து உடனடியாக துப்பாக்கி மூலம் மயக்க ஊசி போட வேண்டும் என தீர்மானித்தனர். ஆனால், விலங்குகள் பூங்காவின் உரிமையாளர் இதனை மறுத்துள்ளார்.

‘சிங்கத்திற்கு மயக்க ஊசி ஏற்றினால், அது செயல்பட சில மணி நேரங்கள் ஆகும். ஆனால், அதற்குள் சிங்கம் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே சிங்கத்தை சுட்டுக்கொன்று விடவது தான் சிறைந்த வழி என தீர்மானிக்கப்பட்டு, உடனடியாக அதனை செய்து முடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய உரிமையாளர், சிங்கம் எவ்வாறு வெளியேறியது என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், இது மனித தவறினால் தான் நிகழ்ந்து இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்ற ஒரு தவறு நிகழாமல் இருக்க ஊழியர்களிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅப்ரிடி ஒரு பைத்தியம்: திட்டித் தீர்த்த பாகிஸ்தான் நடிகை
Next articleபஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா