எமக்கு புனர்வாழ்வளியுங்கள் இல்லையேல் பிணையில் விடுதலை செய்யுங்கள்: அரசியல் கைதிகள் வேண்டுகோள்

downloadஎமக்கு புனர்வாழ்வளியுங்கள் இல்லையேல் பிணையில் எம்மை விடுதலை செய்யுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்கள் விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் 9 ஆவது நாளாகவும் மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதிகள் சிலர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு விடுதலையின் பின்னர் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது தாங்கள் சிறைச்சாலைக்குள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் சிறை வாழ்க்கையானது ஒரு நரக வாழ்க்கை என்று குறிப்பிட்ட இவர்கள் தாம் தவறுகள் செய்யாமல் தண்டணை அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் மாதத்திற்கு இரண்டு தடவைகள் நீதிமன்றத்திற்கு செல்லும் தமக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Previous articleபஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா
Next articleமக்கள் தீர்மானத்தையும் மீறி யாழில் மீண்டும் காணி பறிக்கிறது கடற்படை