இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று பணிப்பெண்ணால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரிஹானை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தாய் தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்து வருகின்றமையால் குழந்தை காலை மற்றும் மாலை நேரத்தில் பணிப்பெண்ணின் பராமரிப்பிலேயே இருந்துள்ளது.
இந்நிலையிலேயே குழந்தை துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் தான் திருமணம் செய்யபோவதாக கூறி பெண் வேலையை விட்டுச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் குழந்தை சுகயீனமுற்றுள்ளது, இதனைத் தொடர்ந்து வைத்தியரொருவரை அனுகிய போதே விடயம் தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.