ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

isis_chennai_002ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது சர்வாரின் மகன் முகமது சிராஜுத்தீன், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அவர் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பியதுடன் பலரை அந்த அமைப்பில் சேருமாறு கூறியுள்ளார்.

மேலும் பலரை தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 10.12.2015 அன்று அவர் ஜெய்பூரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்பு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு ராஜஸ்தான் மாநில பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக 24 நபர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?
Next articleஉயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே! யாழ், ஆர்ப்பாட்டம்