புதிய கட்சியை தொடங்க மஹிந்த தலைமையில் நேற்றிரவு கூட்டம்

150817142932_mahinda_rajapaksha_512x288_getty_nocreditஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்றிரவு நடந்துள்ளது.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஸவின் இணைப்பு அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, மற்றும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleவித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!
Next articleஅவதானம்..! இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி: சுனாமி எச்சரிக்கை விடுப்பு