தெறி, கபாலி படங்களுக்கு சிக்கல்

mqdefaultதமிழில் பெயர் வைத்த படங்களுக்கும் U சான்றிதழ் பெற்ற படங்களுக்கும் தமிழக அரசு 30% வரிவிலக்கு அளித்து வருகின்றது.ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலும், U சான்றிதழ் பெற்றாலும் வரிவிலக்கு சலுகை கிடைக்காதாம்.

தேர்தல் கமிஷன் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும் என்பதால் எந்தவிதமான அரசு சலுகைகளும் வழங்கப்படாது.தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வரிச்சலுகையை பெற்றுவிட வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.இதில் ஏப்ரல் 14ம் தேதி விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்திற்கு வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. கபாலி படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleவடக்கில் புதிதாக திருமணம் செய்வோருக்கு குழந்தைப் பாக்கியம் குறைவடைகிறது!
Next articleயாழில் திருட முயன்ற இருவர் மடக்கிப் பிடிப்பு