துலங்கும் உண்மைகள்…! எம்.எச் 370 விமானத்தினுடைய சிதைவு கிடைத்தது…?

Chathurika-Sirisenaமொசாம்பிக் நாட்டில் கரையொதுங்கியுள்ள விமானமொன்றின் சிதைவு கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தினுடையதாக இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

போய்ங் 777 விமானத்தின் பின் புற ‘horizontal stabilizer skin’ பகுதியொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எம்.எச் 370 ஐத் தவிர எவ்வித போய்ங் 777 விமானமும் கடந்த காலங்களில் காணாமல் போனதாக பதிவுகள் இல்லையெனவும் எனவே அது மலேசிய எயார்லைன்சின் மர்மமான முறையில் காணாமல் போன விமானமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதைவின் படங்கள் தற்போது மலேசிய ,அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியூனியன் தீவுகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட விமானமொன்றின் சிதைவும் எம்.எச் 370 இனுடையது என அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இவ்வறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மலேசியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி 239 பேருடன் மாயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் திருட முயன்ற இருவர் மடக்கிப் பிடிப்பு
Next articleராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு!!!