சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக எப்.சீ.ஐ.டீ.யில் முறைபாடு?

Vigneshwaranவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைக் காவற்துறை பிரிவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகிய இரண்டு பேருக்கு எதிராகவும் இந்த முறைபாடு பதிவு செய்யப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளில் இருந்து விவசாய அமைச்சரை, வடக்கு முதல்வர் பாதுகாக்க முயற்சிப்பதாக அவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இம் முறைப்பாடு ரணிலின் ஆசீர்வாதத்துடன் வடமாகாண சபையின் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்த பின் எடுக்கப் பட்ட முடிவாக கூறப்படுகிறது.

இவ்வகையான விசாரணை ஒன்று நடாத்தப் படுவதை இந்தியா மனதாற விரும்புவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விக்னேஸ்வரனை தமிழர் அரசியலில் இருந்து அகற்றுவதில் இந்திய ரோ அமைப்பு மிக மிக நுட்பமாக செயற்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு!!!
Next articleஇன்னும் 300 புலிகள் எம்மிடம் முகாம்களில் உள்ளார்கள்- ஒத்துக் கொள்ளும்மேஜர் ஜெனரல் ரத்நாயக்கா