செம்மணி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வயல் காணியில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கடந்த ஒரு வாரகாலமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வயல்காணியில் காணப்படும் எரிந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் நாய்கள் அதனை இழுத்து வீதிகளில் போடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
எனவே உடனடியாக குறித்த பகுதி மக்கள் கிராம சேவையாளருக்கு அறிவித்து அதனை உரியவர்களால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.