கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த இருவருக்கு 6 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த யாழ்.நீதிமன்றம் இருவரின் தொலைபேசியையும் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குமாறு உத்தரவிட்டது.
பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அருகில் தொலைபேசியில் படம் பார்த்த குற்றச்சாட்டில் குருநாகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனும், ஐந்து சந்திப் பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்து ஆபாசப்படம் பார்த்த இருபாலைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரையும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் நேற்று முன்தினம் வாசிக்கப்பட்டது. குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனையடுத்து அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.