மனிதர்களை மாயமாக மறையச் செய்யும் பயங்கரத் தீவு பற்றி தெரியுமா?

envaittinetபார்ப்பதற்கு மிகவும் அழகாக கண்களைக் கவரும் வண்ணம் கென்யாவில் ஓர் அற்புதமான ஏரி உள்ளது. அது தான் ருடால்ப் ஏரி. இந்த ஏரியைச் சுற்றி சிறு சிறு தீவுகள் மற்றும் பழமை மாறாத பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்…. இந்த தீவுகளில் ஒன்று தான் என்வைட்டினெட் தீவு. இதன் உண்மையான அர்த்தம் ‘திரும்ப வராது’ என்பதாகும். இந்த தீவு மிகவும் மர்மம் நிறைந்த ஒன்று. அது என்னவெனில், இந்த தீவுக்கு சென்ற யாரும் திரும்பி வந்ததில்லை என்பது தான்.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!! இந்த என்வைட்டினெட் தீவு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் உள்ளது. இப்போது இந்த மர்மத் தீவு குறித்து காண்போம்.

என்வைட்டினெட் தீவு
மேலும் என்வைட்டினெட் தீவு மக்கள் வியாபாரத்திற்காக அடிக்கடி அருகில் உள்ள தீவுகளுக்கு வருவார்களாம். ஒரு கட்டத்தில் அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததாம். பின் அந்த தீவைச் சேர்ந்தவர்கள் எவருமே வரவில்லையாம்.

ஏன்?
திடீரென்று என்வைட்டினெட் தீவைச் சேர்ந்த மக்கள் ஏன் வரவில்லை என்று சந்தேகம் கொண்டு, அத்தீவிற்கு ஒருசிலரை அனுப்பி என்னவென்று பார்க்க அனுப்பினராம். ஆனால் அப்படி சென்ற யாரும் திரும்ப வரவில்லையாம்.

நில ஆய்வாளர் விவியன் ஃபுக்ஸ்
1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயே நில ஆய்வாளர் விவியன் ஃபுக்ஸ், ருடால்ப் ஏரியை ஆராய்ந்து கொண்டிருந்த போது, இந்த தீவு குறித்து கேள்விப்பட்டார். பின் இந்த தீவு குறித்து ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவருடன் இரண்டு இளம் ஆய்வாளர்களான மார்டின் ஷெப்லின் மற்றும் பில் டேசன் ஆகியோரும் வந்திருந்தனர்.

மர்மமான இளம் ஆய்வாளர்கள்
இந்த தீவுக்குள் அந்த இரண்டு இளம் ஆய்வாளர்களும் சென்றனர். 15 நாட்கள் ஆகிய நிலையிலும், சென்றவர்கள் திரும்பிய பாடில்லை. மேலும் எந்த ஒரு தகவலும் தெரிந்தபாடில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் விவியன் தொலைவில் இருந்தே ஆய்வு மேற்கொண்டார்.

ஹெலிகாப்டர் உதவி
விவியன் என்வைட்டினெட் தீவை ஹெலிகாப்டரில் ஏறி சுற்றிப் பார்த்தார். அப்போது அத்தீவில் ஆள் நடமாட்டமே இல்லை. எரிந்து போன குடிசைகளும், அழுகிய மீன்களும் தான் சிதறிக் கிடந்தன.

Previous articleதாஜுடீன் கொலை:சி சி ரி வி காணொளியை வழங்குமாறு டக்ளஸ்சிற்கு உத்தரவு
Next articleநயினாதீவுக் கடற்பரப்பில் 67அடி உயரத்தில் புத்தர் சிலை