எனது ஜாதகம் அரசியலுக்கு எதிரானதல்ல – கோட்டாபய

Gotaeஅரசியலுக்கு வரக் கூடாது என எனது ஜாதகத்தில் எந்தவொன்றும் கூறப்படவில்லை. நான் அரசியல்வாதியல்ல. கட்சிக்குரிய தலைமைப் பொறுப்பைத் தந்தால், அதனை மறுப்பதற்கும் இல்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாரிய லஞ்சம், ஊழல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு இன்று அவர் வருகை தந்திருந்தார். இதன்போது, புதிதாக அமைக்கப்படவுள்ள கட்சிக்கு தாங்கள் தலைமை வகிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தற்போதுள்ள சோதிடர்களையும் நம்ப முடியாது. இதனால், தான் தற்பொழுது சோதிடர்களை நாடுவதில்லையெனவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Previous articleநயினாதீவுக் கடற்பரப்பில் 67அடி உயரத்தில் புத்தர் சிலை
Next articleராஜீவ் கொலை சந்தேக நபரின் விடுதலை முயற்ச்சி தேர்தல் குண்டாக இருக்கலாம் !