கொழும்பில் பிரதான பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

colombo_schoolகொழும்பில் பிரசித்த பெண்கள் பாடசாலையினுள் நுழைய முற்பட்ட , பிரபல ஆண்கள் பாடசாலையொன்றின் மாணவர்கள் கொள்ளுபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் , ஐந்து பேர் பெற்றோரின் பிணை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் பாடசாலை மாணவர்கள் , பெண்கள் பாடசாலையினுள் நுழைய முயல்வதாக கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் அவ்விட த்துக்கு வரும் போது சிலர் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பில் பிரதான பெண்கள் பாடசாலைக்கு நேற்று முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Previous articleபன்ச் வசனங்கள் இல்லை- அதுக்கும் மேல? கபாலி FULL UPDATES
Next articleமஹிந்த அணிக்கு மைத்திரி வைத்த ஆப்பு!