கோடிகளில் புரளும் வீரர்கள்! நிமிடத்திற்கு ரூ.1.01 லட்சம் ஊதியமாக பெறும் யுவராஜ் சிங்!

yuvi_dhoni_001பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் அதிகம் சம்பளம் பெறுவது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு டி20 பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதேபோல் ஹாக்கி இந்தியா லீக், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து, பிரிமியர் பேட்மிண்டன், சாம்பியன்ஸ் டென்னிஸ், பிரிமியர் டென்னிஸ், புரோ கபடி, புரோ மல்யுத்தம் போன்றவை அடுத்தடுத்து ஆரம்பிக்கப்பட்டன.

இவற்றில் கடந்த ஒரு ஆண்டாக வெளிநாட்டு வீரர்கள் பெற்ற சம்பள விவரம் அறிக்கையாக வெளியாகியுள்ளது.

இதன் படி, இந்த தொடர்களில் விளையாடிய 336 வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.527 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் (823 கோடி) 64 சதவீதமாகும்.

அதேசமயம் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.296 கோடி தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் 36 சதவீதம் மட்டுமே.

டி20 பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தான் அதிக சம்பளம் வாங்குவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பிரிமியர் டென்னிஸ் வீரர்கள் தான் அதிக சம்பளம் வாங்கின்றனர்.

அதன் படி, ஸ்பெயினின் நடால், சுவிஸின் ரோஜர் பெடரர் தான் அதிக சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் தலா ரூ.25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனர்.

மேலும், பிரிமியர் டென்னிஸ் போட்டியில் விளையாடும் 6 வீரர்கள் நிமிடத்திற்கு தலா 6 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளமாக பெறுகின்றனர். இதில் பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே (நிமிடத்திற்கு ரூ.1.65 லட்சம்) முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் (நிமிடத்திற்கு ரூ.1.65 லட்சம்) முதலிடத்தில் இருக்கிறார். யுவராஜ் சிங் (நிமிடத்திற்கு 1.01 லட்சம்) 17வது இடத்தில் உள்ளார்.

மேலும், கோஹ்லி (29 இடம்), டோனி (34), ரெய்னா (48) ஆகியோர் நிமிடத்திற்கு ரூ.75 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றனர்.

Previous articleமஹிந்த அணிக்கு மைத்திரி வைத்த ஆப்பு!
Next articleஎந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் ஆகுங்கள், ராணுவத்திற்கு கிம் ஜோங் உத்தரவு