எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் ஆகுங்கள், ராணுவத்திற்கு கிம் ஜோங் உத்தரவு

201603040927128930_Be-ready-to-use-nuclear-weapons-at-any-time-North-Korea_SECVPFபியொங்யாங்,

எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருங்கள் என்று ராணுவத்திற்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டு உள்ளார்.

சர்வதேச ஒப்பந்தங்களையும், உலக நாடுகளின் கடும் எதிர்ப்பினையும் புறக்கணித்து விட்டு வடகொரியா 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 3 முறை அணுகுண்டுகளை சோதித்துப்பார்த்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி முதன்முதலாக அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்ததாக அறிவித்து உலக நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன் கடந்த மாதம் 7–ந் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ராக்கெட் மூலம் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அந்த நாடு செயற்கைகோளை விண்ணில் ஏவவில்லை; ராக்கெட்டை ஏவித்தான் சோதித்தது என உலக நாடுகள் கூறி கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதியதாக கடும் பொருளாதார தடையை விதித்து உள்ளது.

இந்த தடைகள் விதிக்கப்பட்டு 24 மணி நேரம் ஆவதற்குள், வடகொரியா மீண்டும் அடாவடியில் இறங்கியது. ஒரே நாளில் வடகொரியா 6 ஏவுகணைகளை கிழக்கு கடற்பகுதிகளை நோக்கி வீசியது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இந்நிலையில் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருங்கள் என்று ராணுவத்திற்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டு உள்ளார். எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையானது எழுந்து உள்ளநிலையில்; எதிர்முனையின் சவாலான தாக்குதலை எதிர்க்கொள்ள, “முன்கூட்டிய தாக்குதல்” முறைக்கு இராணுவத்தை சுழல்படுத்த உத்தரவிட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இத்தகைய உத்தரவு கொரிய தீப கற்பத்தில் பதட்டமான சூழ்நிலையானது அதிகரித்து உள்ளது.

Previous articleகோடிகளில் புரளும் வீரர்கள்! நிமிடத்திற்கு ரூ.1.01 லட்சம் ஊதியமாக பெறும் யுவராஜ் சிங்!
Next articleபுத்தர் சிலையை அமைத்து மதவாதம் வளர்க்காதீர்கள்