வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள்! புலனாய்வு பிரிவினர் அறிக்கை

hqdefaultயாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையினை இன்றைய தினம் மன்றில் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமார் கொலைக்கு திட்டமிட்டுள்ளார்.

2ம் சந்தேக நபர்களான தவக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் கொலைக்கு உடந்தையாக வித்தியாவை வழிமறித்து கடத்தியதுடன், 5ம், 6ம் சந்தேக நபர்கள் வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்ததாகவும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 11ம் சந்தேக நபர் வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் போது காவல் காத்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் பொலிஸார் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் 10 சந்தேக நபர்களும் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை வித்தியா கொலைக்கான நீதி கிடைக்கும் என தெரிவித்திருக்கும் நீதிபதி வை.எம்.எம்.றியாட் வழக்கை எதிர்வரும் 18ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளார்.

Previous articleபுத்தர் சிலையை அமைத்து மதவாதம் வளர்க்காதீர்கள்
Next articleபலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளியேனும் அபகரிக்கப்படமாட்டது!- யாழில் அமைச்சர் சுவாமிநாதன்