பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளியேனும் அபகரிக்கப்படமாட்டது!- யாழில் அமைச்சர் சுவாமிநாதன்

Palali-Airportவிமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளியேனும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என மீள்குடியேற்றத் துறை அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் வீடமைப்புத் திட்டத்தினை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் முக்கியமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளி கூட அபகரிக்கப்படமாட்டாது. மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். இது ஒரு பிராந்திய விமான நிலையமாகவே செயற்படும். மக்கள் இதனை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றார்.

Previous articleவித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள்! புலனாய்வு பிரிவினர் அறிக்கை
Next articleஇலங்கையின் முக்கிய புள்ளிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு