இப்படியும் ஒரு மனைவி. நெகிழ வைத்த சம்பவம். இலங்கையில்.

stதெர­ணி­ய­கல மாலி­பொட திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் பெண் ஒருவர் தனது கண­வனின் சட­லத்­து டன் 10 நாட்­க­ளுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத் தம்­ப­தி­யினர் 15 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்து கொண்டு திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் சிறிய குடிசை ஒன்­றினை அமைத்து இவர்கள் இருவர் மாத்­திரம் வசித்து வந்­துள்­ளனர்.

நீண்­ட­கா­ல­மாக நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தனது கண­வரை குறித்த பெண் பரா­ம­ரித்து வந்­துள்­ள­துடன், பெரிதும் சிர­மப்­பட்டு கண­வ­னுக்கு தேவை­யான மருந்து மாத்­தி­ரை­க­ளையும் பெற்றுக் கொடுத்­துள்ளார்.

இவ்­வா­றி­ருக்­கையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் அவ­ரது கணவன் உயி­ரி­ழந்­துள்ளார்.

கண­வனின் பிரிவால் மன­ரீ­தி­யாக பாதிப்­ப­டைந்த குறித்த பெண் தனது கண­வனின் உயி­ரி­ழப்பு குறித்த யாரி­டமும் தெரி­விக்­காது சட­லத்தை வீட்­டி­னுள்­ளேயே வைத்து வழமை போன்று அன்­றாட செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­துள்­ள­துடன் சுமார் 10 நாட்­க­ளுக்கு அதி­க­மாக சட­லத்­துடன் இருந்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.

அப் பெண்ணின் வீட்­டுக்கு அயலில் வசித்து வரும் நப­ரொ­ருவர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­பாக அவ்­ வ­ழி­யாக சென்­றி­ருந்த வேளையில் அவ் வீட்­டி­லி­ருந்து துர்­மணம் வீசி­ய­மையால் சந்­தேகம் கொண்டு வீட்­டுக்குள் சென்ற பார்த்த வேளையில் அழு­கிய நிலையில் அந் நபரின் சட­லத்­தினை கண்­டு­பி­டித்­துள்ளார்.

பின்னர் தெர­ணி­ய­கல பொலி­ஸா­ருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இந் நபர் சுகயீமடைந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

Previous articleஜெனிவாவில் அசத்தும் மங்கள
Next articleநாங்கள் இலங்கையை பழிவாங்கவில்லை.