மஹிந்தவின் கள்ள பணத்தை பிடிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை

mr_moneyமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவின் உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.

அந்த வகையில், மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்குகள் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வங்கி கணக்குகளில் பெருந்தொகையான பணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் முழுமையான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

தமது நாட்டு வங்கி கணக்குகள் தொடர்பிலான தகவல்களை ஸ்ரீலங்கா போன்ற சிறிய நாடுகளுக்கு வழங்க சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வராது எனவும், இதனால் தான் அமெரிக்கா போன்ற பலம்மிக்க நாட்டின் உதவியை ஸ்ரீலங்கா நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous articleநாங்கள் இலங்கையை பழிவாங்கவில்லை.
Next articleகனடாவில் குளிர்காலத்தினை எவ்வாறு சமாளிப்பது? அகதிக் குழந்தைகளுக்கு ஓர் வழிகாட்டி!