கனடாவில் குளிர்காலத்தினை எவ்வாறு சமாளிப்பது? அகதிக் குழந்தைகளுக்கு ஓர் வழிகாட்டி!

art_project_002கனடாவில் நிலவும் குளிர்காலத்தில் இருந்து சிரிய அகதிக்குழந்தைகள் எவ்வாறு தங்களை காத்துக்கொள்வது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய Art City என்ற பெயரில் வழிகாட்டி ஒன்றினை NEEDS centre தயார் செய்துள்ளனர்.
கனடா குளிர்ச்சி மிகுந்த நாடு ஆகும், அங்கு வாழும் குழந்தைகளுக்கு தங்கள் நாட்டில் நிலவும் குளிர்காலம் பற்றி அறிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால், கனடிய நாட்டிற்கு அகதிகளாக படையெடுத்து சிரிய அகதிக் குழந்தைகள் குளிரால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர், அதுமட்டுமின்றி சில குழந்தைகள் பனியை பார்த்திருக்க மாட்டார்கள்.

எனவே, அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, குளிரினை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தங்களை மாற்றிக் கொள்வது எப்படி? மேலும் வெளிச்சத்தினை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற தகவல்கள் அடங்கிய வழிகாட்டி தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டியின் மூலம் குடியேறிகள் மற்றும் அகதிகள் குளிர்காலத்தினை சந்தோஷமாக கொண்டாடலாம் என இதனை தயாரித்துள்ள அமைப்பு கூறியுள்ளது.

Previous articleமஹிந்தவின் கள்ள பணத்தை பிடிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை
Next articleஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த ஓபிஎஸ்!