சம்மாந்துறை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையில் சாதனை

Sammanthurai1சம்மாந்துறை வைத்தியசாலையில் மறக்க முடியாத நிகழ்வொன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றது, அவ்வாறெனில் அது எங்கு நடந்திருக்கும்? ? சத்திர சிகிச்சைக்கூடத்திலேயாகும்.,

அபிவிருத்திக்காக ஐந்து வருடங்களாக முக்கித்தவிக்கும் சத்திரசிகிச்சைக்கூடமானது SICU / ICU இல்லாமலே காலத்துக்குக் காலம் திறமைமிக்க சத்திரசிகிச்சை நிபுனர்களைக்கொண்டு பல மைல்கற்களை எட்டியுள்ளது…

கடந்த புதன்கிழமை காலை 6.40 மணியளவில் 42வயதுடையவர் இனந்தெரிந்தோரால் கத்திக்குத்துக்கு இலக்காகி கொண்டுவரப்பட்டார்.

இடப்பக்க மார்பிலும் இடப்பக்க தொடையிலுமாக இரண்டு குத்துகள்.

இடப்பக்க மார்பிலிருந்து அதிக ளவான இரத்தப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சத்திர சிகிச்சைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு Dr. தயாலன்( Dr Dayalan) Consultant surgeon யினால் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது..

கத்தியானது இதயத்தின் புறவணிவரை (Pericadium)தாக்கியதனால் அதிகளவான குருதி இழப்பு ஏற்பட்டது. நெஞ்ஞைப்பிளந்து இதயத்தில் இருந்த இரத்த ஓட்டத்தைநிறுத்தியது சாதனைதான், Dr Dayalan vs sir யின் சாதனை,

இந்த சிறிய வைத்தியசாலையில் நெஞ்ஞைப்பிளந்து சத்த்திரசிகிச்சை செய்வதென்பது மிகப்பெரிய Risk. எனினும் அதை வெல்வதென்பது மிகப்பெரிய விடயம்தான்,

மேலும் சேவையை செவ்வனே செய்யவேண்டுமென்று மேலதிக சிகிச்சைக்காக ( Cardio thoracic unit )கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது..

பிந்திய தகவலின்படி தற்போது நோயாளி நன்றாக உள்ளார் என்று.

கண்டிக்கு நோயாளியை மயக்க நிலையிலேயே அனுப்புவதற்காக Portable ventilator யை தந்து உதவிய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் MS Dr. Rahman sir அவர்களுக்கு சம்மாந்துறை வைத்தியர்கள் சங்கம் (SMA) சார்பாக நன்றி தெரிவித்துள்ளது.

மக்களே சம்மாந்துறை வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையை கருத்திக்கொள்ளாது வைத்தியசாலை வைத்தியர்கள் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,

Previous articleஏழு தமிழர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு! ஜெயலலிதா உருவ படம் எரிப்பு!
Next articleகொழும்புத் துறைமுகத்தில் ரஷ்யக் கடற்படைக் கப்பல்