கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்யக் கடற்படைக் கப்பல்

Russian_ship-colomboரஷ்யக் கடற்படையின் கருங்கடல் கப்பல்படையின் மீட்புக் கப்பலான எப்ரோன், நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு ரஷ்யப் போர்க்கப்பல் வந்தடைந்த போது சிறிலங்கா கடற்படையினர் வரவேற்றனர்.

சுமார் 90 மீற்றர் நீளம் கொண்ட இந்த ரஷ்யக் கடற்படைக் கப்பலில், 138 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இந்தப் போர்க்கப்பலின் மாலுமிகள், கொழும்பு, கண்டி, காலி நகரங்களைச் சுற்றிப் பார்வையிடவுள்ளனர்.

இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் டெனிஸ் பேர்க்ஸ் நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

Previous articleசம்மாந்துறை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையில் சாதனை
Next articleஷிரந்தி வழியை பின்பற்றும் நிரூபமா ராஜபக்ச